Saturday, January 19, 2008

Noam Chomsky,சர்வதேச ஊடகங்கள் மற்றும் ஈழப்போராட்டம்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி.
ஈழப்போராட்டம் சர்வதேச குற்றமா?
இந்த கேள்விக்கு பதில் சொல்லவேண்டியவன் நானல்லன்; அமெரிக்காவும், பிரிட்டனும்.
பாலஸ்தீனம் அரபுகளின் தேசம். இரண்டாம் உலகப்போரில் யூதர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிக்காக
அரபுகளைக் கொன்று அங்கே யூதர்களைக் குடியமர்த்தினார்கள்.துண்டாக்கப்பட்ட தேசம் ரெண்டாக்கப்பட்டது. பாதி அரபிக்களுக்கு, பாதி யூதர்களுக்கு.

உரிமையே இல்லாத யூதர்க்களுக்கு ஓரு நீதி; உரிமை உள்ள தமிழர்களுக்கு ஓரு நீதியா?

யூதர்களின் கண்ணில் வெண்ணெய்,
தமிழர்களின் கண்ணில் சுண்ணாம்பா?

அமெரிக்காவும் பிரிட்டனும் அரபிக்களையும் அணைத்துக் கொண்டன,யூதர்களையும் இழுத்துக் கொண்டன.
ஏனென்றால் யூதர்களுக்குகப் பெரிய மூளை இருக்கிறது.அரபிகளிடம் பெட் ரோல் இருக்கிறது.
பாவம் தமிழன்! இவனிடம் என்ன இருக்கிறது.

16.01.08 குமுதம் இதழில் வாசகர் ஓருவருக்கு வைரமுத்து அளித்த பதில் இது.

13.01.08 வார ஜுனியர் விகடனில், "சுயநல இலங்கைக்கு தோள் கொடுக்கலாமா?", என்ற தலைப்பில் ரவிகுமார் அவர்களின் கட்டுரையை படி த்தேன். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அராஜகப் போக்கு, மனித உரிமை மீறல்கள்,இலங்கை அரசின் உலகை ஏமாற்றும் த ந்திரம், இந்தியா எடுக்கவேண்டிய நிலை பற்றி ஆழ்ந்து , ஆராய்ந்து எழுத்தப்பட்ட அருமையான கட்டுரை அது. தமிழகத்தில் சில வார இதழ்கள் தவிர , மற்ற தமிழ், ஆங்கில நாழிதல்கள் எந்த அளவிற்கு ஈழப்போரட்டத்தை பற்றி மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கிறது என தெரியவில்லை, ஆனால் மகிந்த ராஜபக்ஷேவின்
அரசு இலங்கை ஊடகங்களை முழு அளவில் பயன்படுத்துகிறது, தன் விருப்புவெறுப்புகளுக்கு
எற்றவாறு, சிங்கள மக்களுக்கு பொய்யான செய்திகளை அளித்து, ஈழப்போராட்டத்தில் தன் கை ஓங்கியிருப்பது போல ஓரு மாய தோற்றத்தை உருவாக்குகிறது.


நாவோம் சாம்ஸ்கி தன்னுடைய ."Manufacturing consent: The political Economy of the Mass Media"
, என்ற புத்தகத்தில் ஊடகங்களை எப்படி அரசு கட்டுப்படுத்த முடியும், கீழ்பணியாத ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களின் ஊடகங்களை எப்படி தனிமை படுத்தி அழிப்பது அல்லது 
அடிப்பணிய வைப்பது பற்றி எழுதியிருக்கிறார்."Manufacturing Consent" என்பதை ஓத்துழைப்பை உற்பத்தி செய்தல் அல்லது இணக்கமாக செயல்பட செய்தல் என தமிழ்படுத்தலாம்.இதற்காக 1975-ல்
கிழக்கு டிமோர்-ரின்
மேல்  இந்தோனேசியாவின் படையெடுப்பை குறிப்பிடுகிறார்.அமெரிக்காவின்
 (வழக்கம் போல) ஆயுத உதவியோடு இந்தோனேசியா கொன்று குவித்த மக்களின் எண்ணிக்கை 2,00,000.

The New York Times மற்றும் மேற்க்கத்திய ஊடகங்கள் இந்த கொடூரங்களை திசை திருப்பி எதுவுமே நடக்காதது போல மக்களுக்கு தவறான செய்திகளை தெரிவித்திருக்கின்றன." The "Staggering mass slaughter" was "a gleam of light in Asia", according to two commentaries in The New York Times, both typical of general western media reaction"- என்கிறார் சாம்ஸ்கி.
இப்போது இராக் போர் மற்றும் உயிர் இழப்புகளை பற்றி அமெரிக்காவில் வெளியாகும் 
செய்திகளும் இதற்கு சரியான எடுத்துக்காட்டு.

இலங்கையில் நடப்பதும் இதுவே.

1.பொய்யான செய்திகளை, கருத்துகளை மக்களின் மனதில் விதைப்பது.
உதாரணத்திற்கு ஐந்து விடுதலைப்புலிகள் போரில் கொல்லப்பட்டால் அதை ஐம்பது
என பொய் சொல்வது.

2.பாதி உண்மையை மட்டும் வெளியிடுதல்.
ஐந்து விடுதலைப்புலிகளும் இருபது இலங்கை ராணுவத்தினரும் கொல்லப்பட்டால்,
விடுதலைப்புலிகளின் இழப்பை மட்டும் பெரிதுபடுத்தி வெளியிடுதல்,இலங்கை ராணுவத்தினரின் 
இழப்பை ஊடகங்களில் வெளியிடாமல் செய்தல்.

3.உண்மையை மறைத்தல்.
தமிழ் இளைஞர்களை கடத்தி கொலை செய்தல் மற்றும் தமிழர்களின் மீதான மனித உரிமை
மீறல்களை வெளி உலகிற்க்கு தெரியாமல் மறைப்பது.

பொய்யை உரக்கச் சொல்லி , மக்களின் மனதில் தவறான செய்திகளை விதைத்து ஆதாயம் தேடும்
கொடூர கெப்பல்ஸ்(Geobbels) பிரச்சாரத்தை தான் செய்கிறது மகிந்த அரசு. நம்மூர் rediff.com மற்றும் ibnlive.com போன்ற செய்திதளங்களும் இலங்கை அரசு வெளியிடும் செய்திகளை வாங்கிக்கொண்டு, ஆராயாமல், உண்மையை அறியாமல் அப்படியே பிரதிபலிக்கும் arm chair journalism தான் செய்கிறது.

பிபிசி ஈழப்போராட்டத்தை பற்றிய செய்திகளை தன் செய்தித்தொடர்பாளார்களை வைத்து சேகரிக்கிறது.
இரு தரப்பு வாதங்களையும் , மறுப்புகளையும் வெளியிடுவதாக தெரிகிறது.
விகடன் தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்ட போது உருக்கமான கட்டுரை எழுதியிரு ந்தது.
அமைதி ஒப்பந்தத்திலிருந்து இலங்கை பின்வாங்கியதை ,"Military solution is all Mr.Rajapakse has left"
,-என்கிறது வால் ஸ்டீரீட் ஜர்னல்.

சர்வதேச சமுதாயம் இலங்கை தமிழர்களுக்கு ஏற்படும் அ நீதியை வேடிக்கை பார்கிறது என்கிறது தமிழ் கார்டியன்
செய்தித்தாள்.

வைரமுத்து அவர்கள் சொன்னது போல,
வரலாறு பெரும்பாலும் பலம் வாய் ந்தவர்களாலேயே எழுதப்படுகிறது.
தமிழீழத்தின் சாத்தியமும், வெற்றியும் விடுதலை புலிகளின் பலத்தை
பொறுத்தே அமையும்.

11 comments:

  1. அருமையான பதிவு

    நன்றி

    ReplyDelete
  2. Well Written.It's time to look forward leaving the complex issues behind.

    ReplyDelete
  3. மோகன் தாஸ்,

    பத்திரிக்கைகள் செய்யும் மிகப் பெரிய மோசடியைப் பற்றி, நானும் ஒரு விரிவான கட்டுரை எழுதி இருந்தேன் - நான்கு பகுதிகளாக. அதன் சுட்டி, இங்கே

    நான் பத்திரிக்கைகளின் போக்கு எப்படி ஒரு சார்பாக இயங்குகிறது என சொலவதற்கு இஸ்லாமியர்களுக்கு எதிரான அதன் போக்கைச் சுட்டிக் காட்டினேன். நீங்கள் ஈழத்தை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். எப்பொழுதுமே பத்திரிக்கைகள் அதிகாரவர்க்கத்தைச் சார்ந்தே, தன் செயல்களை நிர்ணயித்துக் கொள்கிறதே தவிர, நியாயங்களின் விதிப்படி அல்ல.

    தொடர்ந்து இந்தப் பத்திரிக்கைகளின் ஒருசார்புத் தன்மையை பகிரங்கப்படுத்துவதன் மூலமே, ஓரளவிற்காவது இவர்களைப் பற்றிய புரிதல்களை மக்களிடத்தில் உருவாக்க முடியும்.

    ReplyDelete
  4. Thalaiva, ennoda name senthil..!!
    Mohandas illa..

    ReplyDelete
  5. Wow, Senthil.......u hv handled a sensitive topic in a sensible way!
    Kudos!!

    Detailed comments....follows!

    ReplyDelete
  6. rediff.com, ibnlive.com மட்டும் இலங்கை அரசின் செய்திகளை வாங்கி அப்படியே பிரசுரிப்பது இல்லை. Times of India, The Hindu, தினமலர், திணமணி, துக்ளக் இதன் பட்டியல் இன்னும் நீளம்.

    பத்திரிக்கைளில் சார்புதன்மை நிலவுவதற்கு நீங்கள் சொன்னது போல் அரசியல்வாதிகளே முக்கிய காரணம். இன்றை தமிழக முதல்வர் அவர்கள் தனது குடும்ப பிரச்சனையை விடுத்து மக்கள (ஈழத்து) பிரச்சணையில் இன்னும் கொஞ்சம் கவணம் செழுத்தினால் ஊடகங்கள் ஈழத்து மக்களுக்காக குரல் கொடுக்கும்.

    அல்லது மக்கள் திரு பழ.நெடுமாறன், வைகோ போன்றாற்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும். பின் ஊடகங்கள் மக்கள் இருக்கும் பக்கம்தான திரும்பும்.

    ReplyDelete
  7. Yes, Have read an article in The Hindu in their Opinion column titled "Examining a post-Prabakaran scenario"

    http://www.hindu.com/2007/12/25/stories/2007122555490800.htm

    When Eelam is getting devastated by war, they write something like this , "An interesting question — uncomfortable for the LTTE — that arises is: who will succeed the supremo if he is taken out? " in that article...hypocrisy...!!!

    ReplyDelete
  8. Anonymous5:13 AM

    என்ன நடக்கப் போகின்றது என்பதை இருந்துபார்ப்பமே...!!!

    நல்ல கட்டுரை

    ReplyDelete
  9. நன்றி நண்பரே!

    சீரிய பார்வையின் ஒரு சிறப்பான கண்ணோட்டம். அதை இங்கே பதிவிட்டிருப்பதால், பலருக்கும் ஈழத்தின் உண்மை நிலமைகளை அறியக்கூடியதாக இருக்கும்.

    அதேவேளை (சில)ஊடகத்துறையினரின் ஒரு பக்கச் சார்பு நிலையையும் இந்த ஆக்கம் சுட்டிக்காட்டுகிறது.

    நன்றி

    நன்றி

    ReplyDelete
  10. hi sethil,

    please post some article in english as well to gain my valuable suggestions

    ReplyDelete
  11. மனிதச் சங்கிலி நடந்து முடிந்த அடுத்த நான் 'டைம்ஸ் ஆஃப் இன்டியா' ஒரு முழு பக்க கவரேஜ் கொடுத்திருந்தது.

    மனிதச் சங்கிலியில் நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் யாருக்கும் என்ன பிரச்சனைக்காக நின்று கொண்டிருக்கிறோம் எனத் தெரியவில்லையாம். அம்மாணவர்கள் அனைவரும் பேராசிரியர்களின் மிரட்டல்களுக்கு பயந்து நின்று கொண்டிருந்தார்களாம். அவர்களை காக்க வைத்துவிட்டு கருணாநிதி லேட்டாக 5 மணிக்குதான் மனிதச் சங்கிலிக்கு வந்தாராம்.

    டிராபிக் பிரச்சனை அதிகமானதே தவிர, அதனால் வேறொன்றும் பிரயோஜனமில்லை என்று சில,பல காரோட்டிகளின் பேட்டியை வெளியிட்டு பக்கங்களை நிரப்பியிருந்தது.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

Email Subscriptions powered by FeedBlitz

Your email address:


Powered by FeedBlitz