Saturday, November 15, 2008

மன்மோகன் சிங் அவர்களே,நீங்கள் இந்தியப் பிரதமரா? அல்லது சிங்களவர்களுக்கு .....??

இந்தியத் தமிழ் மீனவர்களை சிங்கள வெறி பிடித்த இலங்கை ராணுவம் கொல்வது உங்களுக்கு தெரியவில்லையா? ராமேஸ்வரம், நாகபட்டினம் மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது இப்பொழுது வாடிக்கையாகிவிட்டது.இலங்கை ராணுவம் நீங்கள் கொடுக்கும் ஆயுதங்களை வைத்துக்கொண்டு, இலங்கை தமிழர்களை இனப் படுகொலை செய்கிறார்கள்,இந்திய மீனவர்களையும் கொன்று குவிக்கிறார்கள்.இந்திய மக்களை காப்பற்றவேண்டிய நீங்கள்,இந்தியர்களைக் கொன்று குவிக்கும் சிங்களவர்களுக்கு ஆயுத உதவி செய்வது,இந்திய இறையாண்மைக்கு உகந்த செயலா? இந்த இழிவான,இந்திய இறையாண்மைக்கு எதிரான செயலை செய்யும்
உங்களை என்னவென்று அழைப்பது?

இந்தியத் தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்களவர்ளை ஆதரிப்பது தான், உங்களது வெளியுறவுக் கொள்கையா?ஒவ்வொரு இந்தியக் குடிமகனையும் காக்க வேண்டிய நீங்கள், இந்த மாதிரி வெளியுறவுக் கொள்கையை எழுதுவதற்க்கு இந்தியத் தமிழர்களின் குருதியை பயன்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்? முதலில் இலங்கை ராணுவத்திற்கு ஆயுத உதவி செய்யவில்லை என்றீர்கள்.பிறகு அங்கே இலங்கையில் இந்திய ராடர் கருவிகளை இயக்கி வந்த இந்திய ராணுவத் தொழில் நுட்பவியலாலர்கள் புலிகளின் வான்வழித் தாக்குதலில் அடிப்பட்டவுடன், மௌனமாக இருந்தீர்கள். சில நாட்கள் கழித்து உங்கள் பாதுகாப்பு அமைச்சக அதிகாரி வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார், இந்தியா இலங்கைக்கு ஆயுத உதவி செய்கிறது என்று.இந்தியப் பிரதமராக இருந்துக் கொண்டு, இது மாதிரி சொந்த நாட்டு மக்களிடமே அப்பட்டமாக பொய் சொல்லி, கீழ்தர அரசியல் நடத்தும் உங்களை என்னவென்று அழைப்பது?

நமது காஷ்மீரில் வாழும் இந்தியர்களை கொல்ல பாகிஸ்தானிகளுக்கு ஆயுதமும், ராடர்களும் கொடுப்பீர்களா? நமது பஞ்சாப்பில் வாழும் சீக்கியர்களை கொல்ல பாகிஸ்தானிகளுக்கு ஆயுதமும், ராடர்களும் கொடுப்பீர்களா?அப்படி இருக்க, தமிழ் நாட்டில் வாழும் இந்திய மீனவர்களை, கொல்லும் இலங்கை ராணுவத்திற்கு ஆயுதமும் ராடர்களும் வழங்குவது எந்த ஊர் நியாயம்.தமிழர்கள் உயிர் என்றால் கேவலமா? இந்தியத் தமிழர்கள் என்ன கிள்ளுக்கீரையா?இந்தியப் பிரதமராக இருந்துக் கொண்டு,எங்கள் வரிப்பணத்தில் வாழ்ந்துக் கொண்டு,எமது நாட்டு இந்தியத் தமிழர்களை கொன்று குவிக்கும்,சிங்களவர்களுக்கு ஆயுத உதவி செய்து, இந்திய மக்களுக்கு துரோகம் செய்யும் உங்களை என்னவென்று அழைப்பது?

தெற்காசிய வல்லரசாக இருந்துக் கொண்டு,அணு ஆயுத நாடா இருந்துக் கொண்டு சொந்த நாட்டு இந்தியத தமிழர்களை, இலங்கை ராணுவத்திடமிருந்து காக்க முடியாவிட்டால் என்ன பயன்? இலங்கை தமிழர்களின் மீது இனப்படுகொலை நடத்தும் இலங்கை பிரதமர் ராஜபக்சே வரும் போது அவரை வரவேற்று கைகுலுக்கி பேசுகிறீர்கள். நீங்கள் கொடுக்கும் ஆயுதத்தை வைத்துக் கொண்டு, உங்கள் நாட்டு இந்திய தமிழர்களையும், இலங்கை தமிழர்களையும் கொன்று குவிக்கும் இலங்கை பிரதமரை கண்டிக்காமல், வரவேற்று பேசுவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா? இந்தியப் பிரதமராக இருந்துக் கொண்டு, எங்கள் வரிப்பணத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நீங்கள்,கடல் கடந்து வந்து பொய் சொல்லும் ராஜபக்சேவின் பேச்சை கேட்கிறீர்கள்,உங்கள் ஆறரை கோடி இந்தியத் தமிழர்களின் ஒருமித்த குரலின் நியாயத்தை கேட்காமல்,வெட்கமின்றி ராஜபக்சேவுடன் புகைப்படத்திற்கு காட்சி தரும் நீங்கள் இந்தியப் பிரதமரா? அல்லது சிங்களவர்களின் பேச்சை கேட்டு நடக்கும் ஒரு ................!!!

இந்த கட்டுரையை அதிகாலை.காம் இணையதளத்திலும் காணலாம்.

http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=7011&Itemid=62

நன்றி அதிகாலை.காம்


7 comments:

 1. இது சிங்குக்கு தெரியுமா?

  ReplyDelete
 2. I dont think he knows this..!!
  etharkum irukattumaennu,
  I have written in English also
  "Shame on you Indian Prime minister."

  ReplyDelete
 3. ஜோ ( நாட் ஸ்டேன் ஜோ)11:51 AM

  மிக நல்லப்பதிவு, நியாயமான கேள்விகள். ஆனா இதக் கேட்டா தேசியம், இறையாண்மை, வெங்காயம்னுட்டு ஒரு கோஷ்டியேல்ல வரும்.எங்க இன்னும் தேசியக் குமிங்கள காணோம்?
  மீனவர்களக் கொல்றது இலங்கை ராணுவம் இல்லையாம், புலிகள் தானாம்ல. போ.தே.கு.கூ* அறிவிக்கை வி்ட்டுச்சே, பார்கலையா நீங்க?

  * போலி தேசிய கும்மிகள் கூட்டணி

  ReplyDelete
 4. நச் பதிவு!

  ReplyDelete
 5. indian students are getting killed in US. Should (Can) India advice US how to run their country???
  in Fishermen case; they are smuggling, poaching and entering waters that India doesn't have any rights over and a warzone...don't shed crocodile tears for fishermen..you want India to save Praba's a$$. Have Fun

  ReplyDelete
 6. Anonymous10:02 AM

  My Friend Well ask question to our PM

  this thought all Tamil people mind now.

  why Singh a act like this???

  R.V. Rao.

  ReplyDelete
 7. Anonymous9:20 AM

  Your empty concern about indian fishermen is well meant but factually wrong. The Srilankan forces capture indian fishermen only when they cross over and go to the srilankan teritory. This fact has been agreed by the leaders of Indian fishermen also. More over after the War with LTTE was over the propaganda that "Tamils are being killed to wipe out the tamil race of Srilanka" iss proved false. The total number of tamils killed in the war is around 600 out of the total population of 2.5lacks. This in no way can be called as genocide.The General tamil population failed to get instigated by the orchestrated protests by the tamil politicians on the payroll of LTTE. The Parliament electons are proof to this

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

Email Subscriptions powered by FeedBlitz

Your email address:


Powered by FeedBlitz