இந்த மென்பொருள் எழுதுபவர்கள் தனி கூட்டம் போல.
வாழ்வின் சுகங்களை சீக்கிரம் ருசிக்க முடிகிறது போல.
முப்பது வயதை தொடுவதற்குள் upper middle class
வாழ்க்கை,கைக்கு எட்டும் தூரத்தில் வெளி நாட்டுப் பயணம்,
cutting edge,3G wireless-ல் வேலை செய்கிறேன்
என்று தெரிந்தவர்களிடம் ஜல்லி அடிக்க போதுமான
டெக்னாலஜி அறிவு, awesome,cool,core competency
என்று கலந்தடிக்க போதுமான பேச்சு திறன்,
அப்புறம் Pulsar-ல் அமர்திக்கொண்டு Forum, PVR ,INOX
என்று ஊர் சுற்ற ஒரு தேவதை,இது கிட்டாத
பாவப்பட்ட ஜென்மங்களுக்கு, நண்பர்களுடன்
கொண்டாட இருக்கவே இருக்கிறது Kingfisher,Vodka..
வேறென்ன வேண்டும்.இது தான் சொர்க்கம்! பேரின்பம்!!
இப்படி தான் நானும் நினைத்துக்கொண்டிருந்தேன்!
எல்லாமே சீக்கிரம் கிடைத்துவிட்டால் சுவாரஸ்சியம்
போய் விடுகிறது போல. சில பொழுதில்,தனிமை-இல்
இருக்கும் போது,what next-?னு ஒரு கேள்வி வரும்.
ஒரு வித நிலைகொல்லாமை, restlessness.
எல்லாமே இருந்தும், ஏதோ இல்லாத மாதிரி.
S.J.சூர்யா சொல்ற மாதிரி இருக்கு,ஆனா இல்ல.
நாம் வாழ்க்கையில் சரியான பாதையில் தான்
செல்கிறோமா என்று ஒரு திடீர் சந்தேகம்.
என் நண்பனிடம் இது பற்றி சொன்னால்,உனக்கு
கேர்ள் ப்ரண்ட் இல்ல மச்சி,அதனால தான் இப்படி
எல்லாம் பேசுர...முடிந்சா யாரயாவது தேத்த பாரு
என்று அவன் வேற வெறுப்பேற்றி விட்டு சென்றான்.
கார்ப்பரேட் உலக்கத்தில் இதை Mid career crisis
(யாராவது இதை தமிழ் படுத்தலாம்) என்கிறார்கள்.
முப்பதுகளின்(அகவை) ஆரம்பத்தில் வரும் என்கிறார்கள்.
நம்ப ஊர் IIM-இல் இது பற்றி கேஸ் ஸ்டடி செய்கிறார்கள்.
முப்பதுகளில் வரும் இந்த நிலைக்கொல்லாமையை
சிலர் நல்லது என்கிறார்கள்.இதனால் நம் மனது நாம்
செய்யும் அன்றாட வேலை-யை விட்டு வேறு ஏதவாது,
நம்மிடம் ஓளிந்திருக்கும் திறமையை
வெளி கொணரும் என்கிறார்கள். நம்மிடம் ஒருவித
தேடல் தோன்றும் என்கிறார்கள்.ஸ்டீவ் ஜாப்ஸ், 1970-களில்,
இந்தியாவில் சுற்றி திரிந்தது கூட இந்த தேடல் தானோ?
கடைசியாக, அந்த Mid career crisis-ல்
இருந்து விடுபட நமக்கு பிடித்தவற்றை
செய்யலாம் என்கிறார்கள்.கிட்டார்
வாசிக்கலாம்,கவிதை கூட எழுதலாம்,இல்லா
விட்டால் சன் ம்யுசிக்-கில் சந்தியா-வை
ரசிக்கலாம்(இது நம்ப ஐடியா.!!).
நண்பனிடம் ,"கவிதை எழுதலாம்னு இருகேன்டா"-என்றேன்.
"ஓ அப்படியா ...!! ம்ம்ம் எங்க ஒண்ணு சொல்லு
பார்கலாம்"-என்றான் ஏற இறங்க பார்த்துக்கொண்டு.
"உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறவாது கண்மணியே
தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான்
எண்ணூறு ஆண்டுகலாய்......"
"ஏய் நில்லு நில்லு....இது ஏற்கனவே வைரமுத்து சார்
"இருவர்" படத்துக்காக எழுதினது"
"ஓ அப்படியா...சரி! இது எப்படி இருக்கு.."
"மூங்கில் இலை மேலே தூங்கும் பனிதுளியே
தூங்கும் பனிதுளியை வாங்கும் கதிரோனே..!!"
"சூப்பரா இருக்கில்ல..கவிதையில சையின்ஸ்-லாம்
இருக்கு பாரு ....எப்படி ??"--இது நான்.
"இது யாருதுனு தெரியல...
ஆனா கண்டிப்பா உன்னுது இல்ல"--இது என் நண்பன்.
"சரி கடைசியா....ஒண்ணு....
உலகம் போற்றும் கவிதை எழுத நினைத்தேன்,
வான் போற்றும் காவியம் வடிக்க நினைத்தேன்,
யாரிந்த பாரதியும்,வைரமுத்துவும்,சுஜாதவும்,
நான் எழுத நினைத்ததை முன்னமே எழுதி இருக்கிறார்கள்!!"
"ஸ்டாப் இட்"
இப்பொழுதெல்லாம் அவன் என்னிடம் கவிதை
பற்றி பேசுவதில்லை.
எனக்கு sun music-ல் சந்தியாவை ரசிப்பது தான் சரி...
நல்ல நகைச்சுவையாக எழுதுறீங்க...ஆங்கில வார்த்தை போடாம தமிழ்லேயே எழுதுங்களேன்...( அதாவது Pulsor - பல்சர்..)
ReplyDeleteகமெண்ட் மாடரேஷன் செய்யுங்க...
ReplyDeleteஇப்படி எழுதுறது கூட நல்லாயிருக்கே செந்தில் குமார். தொடருங்கள்.
ReplyDeleteMachi,i too have same feeling
ReplyDeletenee sandhiyava rasikka aarampithuvittai ... naan yellaraiyum rasikka aarampichirikken... oru vela girl friend iruntha intha pirachanai irukkatho ... yena rendu perumae ippa ponnungalathan rasikka aarampichirukkom athu naala ketten ...
வாழ்கையில் வெறுமையா அதுவும் 30யிலேயே!!
ReplyDeleteஎனக்கு இப்பதான் கொஞ்சம் அந்த சாயல் அடிக்கிறது.
எழுத்தில் மா சிவகுமார் சாயல் அடிப்பது போல் எனக்கு தோன்றுகிறது.
எனினும் தொடருங்கள்..வாழ்த்துக்கள்.
Dude, you are not alone :)
ReplyDeleteஅய்யோ அய்யோ...
ReplyDeletenalla post da... 30s thaane.. innum time irukku :)
ReplyDeletetime kedacha namma blog pakkam vandutthu po...
findarun.blogspot.com
ungla elam ninaicha enku romba paavama iruku.engla pathu manasu thethika machaan.engluku life startinge aavala.
ReplyDeleteI have always marked your blogs for reading pleasure. This one also is very typical of you.. witty and thought provoking...
ReplyDeletenicely written. i really enjoyed the post.
ReplyDeletekeep writing !
ம்ம்...எனக்கும் இப்போ அந்த நிலமைதான்...'அடுத்தது என்ன'?ங்குற கேள்வி அடிக்கடி வருது...பள்ளி,கல்லூரி நாட்களின்போது கனவில்கூட நினைக்காத பல விஷயங்கள்,அதிக சிரமம் இல்லாமல் கிடைத்துவிடுகிறது.சில விஷயங்கள் அலுத்தும் போய்விட்டது(விமானப்பயணம்,அமெரிக்கா etc)...
ReplyDeletebtw..am not able to identify u...gime more details...
\\சிலர் நல்லது என்கிறார்கள்.இதனால் நம் மனது நாம்
ReplyDeleteசெய்யும் அன்றாட வேலை-யை விட்டு வேறு ஏதவாது,
நம்மிடம் ஓளிந்திருக்கும் திறமையை
வெளி கொணரும் என்கிறார்கள்.\\
thats intresting!
நல்லா எழுதியிருக்கிறீங்க!