Tuesday, July 11, 2006

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி

பஞ்சத்தின் நிழல் படிந்திருந்த 1930-க்ளில்
இப்படி எழுத பாரதியால் தான் முடியும்.

பாரதியின் படைப்புகள் அதிகம் படித்ததில்லை, ஆனால்
கல்லூரி நாட்களில் ஞானராஜசேகரின் "பாரதி" படம்
பார்த்ததுண்டு. பாரதியை பற்றி நிறைய படித்திருக்கிறேன்,
வியந்திருக்கிறேன்,அசந்திருக்கிறேன்.

காலத்தை கடந்த சிந்தனை,சமுதாயத்தின் ஏற்ற தாழ்வுகளின் மேல்
உள்ள கோபம்,"தமிழ் இனி மெல்லச் சாகும்", எனும் போது
தெரிகின்ற முன் கோபம், "விசையுறு பந்தினை போல்...",எனும் போது
உலகத்தை மாற்ற சக்தியை வேண்டுதல்,யோக மந்திரத்தில் தான்
சாதாரண கூட்டதை சேர்ந்தவன் இல்லை என முழங்குதல்,இலாகிரி
பழக்கங்களை தொடும் போது தெரிகின்ற ஒரு வித restlessness,
இப்படி நிறைய eccentric குணாயதிசியங்கள்.

தான் நோபல் பரிசுக்கு தகுதியானவன் என உலகிற்கு அறிவிக்கும்போது
கூட அதில் தெரிவது அவரது தன்னம்பிக்கையும்,
உலகம் உணராத உண்மையும் தான்.

தீண்டாமை இருந்த போது, "காக்கை குருவி எங்கள் சாதி"-என்று
சொன்னதால் மக்களுக்கு புரியவில்லை.சம கால மக்களால்
அறிந்து கொள்ள முடியாத மேதமைக்கும்,
அலைவரிசை ஒத்துலையாமைக்கும் யாரை குறை சொல்வது.

அதனால் தான் கடவுள் அவரை சீக்கிரம் அழைத்துக்கொண்டாரோ என்னவோ..?


ஒவ்வொரு முறை தர்மபுரி செல்லும் போதும், ஓசூர் பேருந்து நிலையத்தில்
பேருந்து கூடவே ஓடி வந்து பழம் விற்கும் ஒரு சிறுவனை கவனித்து இருக்கிறேன்.
அவனுக்கு கீழிருந்து பேருந்தின் சன்னல்கள் கூட எட்டாது.

"என்னடா பேரு"-இது நான்.

"விஜி காந்த்..... பழம் வாங்கு சார்,ஒருபாக்கு ஒண்ணு"

"எவ்வளவு சம்பாதிப்ப ஒரு நாளைக்கு"

"எறனூறு ரூவா கெடைக்கும் சார்"

"பள்ளி கூடம் -லா போறது இல்லயா"

"எதுக்கு சார்...பழம் வாங்குறியா இல்லயா சார்,ஒருபாக்கு ஒண்ணு"

"சாயந்திரம் என்னடா பண்ணுவே...."

"எங்க தலைவர் படதுக்கு போவேன்."

அடுத்த பெங்களூர் பேருந்து வந்தது,கூடவே ஓடி
மாயமாகி விட்டான்.

எங்கோ தூரத்தில் அவன் குரல் கேட்டது.

"பழம், ஒருபாக்கு ஒண்ணு, ஒருபாக்கு ஒண்ணு"

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்......!!

8 comments:

  1. பாரதி சொன்னதெல்லாம் சரிதான். காமராசர் மதிய உணவுத் திட்டம், எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம், கலைஞரின் வாரத்திற்க்கு 2 முட்டை என பல இருந்தாலும் மக்கள் மனம் இன்னும் அதற்க்கு தயாராக இல்லை...

    ReplyDelete
  2. செந்தில், மிகவும் எளிய நல்ல நடை. நிறைய எழுதுங்கள். எழுத்து கைகூடும்.

    மேலே உதயகுமார் சொன்னது போலச் சத்துணவுத் திட்டம் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் இதையும் பார்க்கத்தான் செய்கிறோம். எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  3. Anonymous11:15 PM

    Senthil,

    Your writing has a unique style. It appears straight forward and is very simple.

    Neraya Eluthunga

    Cheers
    Navin
    http://navs.wordpress.com

    ReplyDelete
  4. Superunga.. nijamaavae sindhikka vechuteenga..

    ReplyDelete
  5. சிந்திக்க வைக்கும் பதிவு,
    அருமை செந்தில்!

    ReplyDelete
  6. You didn't say if you bought any fruit from that boy. Yes, Bharathi's command/entreaty is great. But if that boy is under such duress to sell fruits and if he makes 200 rupees a day and helps his family we all should support that effort.
    By the way, Bharathi wrote those verses between 1910 and 1920, not in the 1930s. He attained immortality in 1921.

    ReplyDelete
  7. Hi Senthil:
    Could you tell me where to find this verse--under which category of Bharathi's works?

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

Email Subscriptions powered by FeedBlitz

Your email address:


Powered by FeedBlitz