Tuesday, May 13, 2008

சிங்கப்பூர் ஒலி 96.8 -ல் நான் ரசித்த பாடல்.

"Heard melodies are sweet, but those unheard are sweeter"-என்கிறார்
ஜான் கீட்ஸ். Ode on a Grecian Urn என்ற அழகான கவிதையில் வருகிறது
இந்த வரிகள். கவிதை வரிகளின் உள்ளர்த்தம் புரிந்து ரசிக்க Yahoo answers
உதவியது. நாம் கேட்டு ரசிக்கும் பாடல்கள் இனிமையாகவே இருக்கின்றன,
அதன் இனிமை ஒரு வரையறைக்குள், ஒரு finite எல்லைக்குள் வந்துவிடுகிறது,
ஆனால் நாம் கேட்காத, அதாவது நாம் கற்பனை செய்து கொள்ளும் இசையை,
பாடலை, எந்த எல்லைக்குள்ளும் கட்டுப்படுத்தாமல், நம் கற்பனைக்கு ஏற்றவாறு
அதன் அந்தம் வரை சென்று அதன் இனிமையை,அமுதத்தை பருகலாம் என்கிறார்.
கீட்ஸ் ஒரு கிரேக்க குடுவையில்(Urn),ஒரு இளைஞன் கிரேக்க வாத்தியகருவியை
பயன்படுத்தி தன் காதலிக்கு இசையை வாசித்து காட்டும் சித்திரத்தை காண்கிறார்.
அது ஒரு சித்திரம் தானே தவிர அந்த இளைஞன் வாசிக்கும் இசையை யாராலும்
கேட்க முடியாது.ஆனால் நம் கற்பனைக்கு எற்றவாறு அந்த "உன்னதமான இசையை",
அதன் இனிமையை ரசிக்கலாம் என்கிறார்.


ஜான் கீட்ஸ் சொல்லும் அளவுக்கு ரசிக்க தெரியாவிட்டாலும், எப்போதும் காற்றினூடே வரும்
FM இசை சுவாரஸ்யமாகவே இருக்கிறது. வெளி நாட்டில் வசிக்கும் போது தனிமை சற்றே
கொடுமை தான், இல்லை ரொம்பவே கொடுமை!

சிங்கப்பூரின் oli.sg மற்றும் ஆஹா FM 91.9 அடிக்கடி கேட்பதுண்டு.
பெரும்பாலும் சமைக்கும் போது கேட்பதுண்டு. யாரிந்த காம்பியரர் பஸிரா?
குறுஞ்செய்தி,ஈராயிரத்து இரண்டு, நிகழ்ச்சியை படைத்துக்கொண்டிருக்கிறோம்,
எங்கிருந்து அழைக்கிறீர்கள், என சரளமாக அழகு தமிழ் வார்த்தைகள்...
அதும் மிக இனிமையான குரலில்! குறுஞ்செய்தி(SMS) போன்ற வார்த்தைகள் நம்ப
த.நா-ல் எந்த அளவிற்கு பயன்படுத்தப்படுகின்றது என தெரியவில்லை.

ஆஹா FM 91.9 கூட இளமையாக ரசிக்கும்படி இருக்கிறது.
It is the easiest way of catching up the things happening in TN.
யாருங்க இது அபர்ணா,அவங்க சென்னை தமிழ் சுவாரஸ்யம்,அப்புறம்
"நம்ப ஊரு ஏஞ்சல்ஸ்"-கு வர்ற ஷர்மிளாவின் துள்ளலான காம்பியரிங் சூப்பர்.
அப்பப்ப கிட்டதட்ட எல்லா நடிகர் நடிகைகளையும் கலாக்கிறார்கள்.
சிம்பு தான் நிறைய அடிபடுகிறார். மாளவிகா, நயன்தாராவை பற்றி கிசுகிசு நிறைய,
அப்புறம் அந்த நமீதா நர்ஸரி ஸ்கூல் டூ.. டூ.. டூமச். நடுநடுவில் ஆஹா FM-க்கு வர்ற
அந்த intro ம்யூசிக் சரி கலக்கல்,அந்த eclectic,diverse குரல்களுக்கு நடுவே
ஒரு சிறுமியின் அழுத்தமான இனிமையான "ஆஹா"-வை எத்தனை பேர் ரசித்தீர்கள்?


பிப்ரவரி மாதத்தின் ஒரு பின்னிரவில்,கோப்பை தேநீருடன் தனிமையில்,
அகன்ற ம்யுனிக் மாநகர வீதியை சாளரம் வழியே ரசித்துக்கொண்டிருந்தேன்.
மல்லிப்பூ இதழ் போல மெதுவாக வெளியே பனி பொழிந்துகொண்டிருந்தது.
ஒலி 96.8 FM-ல் பி.சுசிலாவின் பாடல் ஒன்று ஒலித்துக்கொண்டிருந்தது.

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல

இங்கு நீ ஒரு பாதி, நான் ஒரு பாதி–இதில்
யார் பிரிந்தாலும் வேதனைப் பாதி,
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்,
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

ஒரு தெய்வமில்லாமல் கோவிலுமில்லை
ஒரு கோவில்லாமல் தீபமுமில்லை
நீ அந்தக் கோவில் நான் அங்கு தீபம்
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல

என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே - நான்
வாரியணைத்தேன் ஆசையினாலே
நீ தருவயோ நான் தருவேனோ
யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல

Fine, எத்தனை பேர் உங்களை விட்டு பிரிந்து சென்ற
காதலியை(காதலனை) நினைத்துக்கொண்டீர்கள்.

5 comments:

  1. Anonymous11:36 PM

    Yaaru machi antha ponnu??

    adhu dan da, unaku bun kuduthito oodi pona ponnu?
    aprum un kaiyla irunthathu T cup aa illa Beer can aa?

    ReplyDelete
  2. //"Heard melodies are sweet, but those unheard are sweeter"-என்கிறார்
    ஜான் கீட்ஸ். Ode on a Grecian Urn என்ற அழகான கவிதையில் வருகிறது
    இந்த வரிகள்/

    நீங்க இப்படி சொன்னத பார்த்தா எனக்கு பாய்ஸ் படத்துல ஒருவர் சொல்லுவாரே "நான் கடைசியா பார்த்த இங்கிலீஷ் படம் ஷோலே ங்கன்னு நினைவுக்கு வருது.. நான் அந்த பய்யன் நிலைமையில தான் நான் இருக்கேன்

    //மாளவிகா, நயன்தாராவை பற்றி கிசுகிசு நிறைய//

    தலைவி மாளவிகா பற்றி கிசு கிசுன்னு வேற சொல்லிட்டீங்க, கண்டிப்பா கேட்டுடுறேன்.

    அப்புறம் ஒலி FM தான் அதிகமா நான் கேட்பேன், அதுவும் இரவில் இந்த கூலி தொழிலாளர்கள் தொலைபேசியில் பேசி பாட்டு கேட்கும் போது அவர்கள் சொல்லும் விசயங்கள் சுவாராசியமாக இருக்கும்.

    ReplyDelete
  3. Un mela sathyama athu T cup thaan da..:-)

    ReplyDelete
  4. Anonymous9:00 AM

    Hello Senthil!!
    first time here.. just read this post.

    ReplyDelete
  5. annaaa .. one blog in english also.. i am despo to comment

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

Email Subscriptions powered by FeedBlitz

Your email address:


Powered by FeedBlitz