Friday, January 09, 2009

ஈழத்தமிழர்களுக்கு தமிழ் நாட்டு தமிழர்கள் எப்படி உதவலாம்??

இலங்கை விருந்துக்கு அழைக்கவில்லை,அதனால நாங்க ப்ராணாப்யை அனுப்பவில்லை..!

போர் நிறுத்தம் செய்யாவிட்டால் ஆதரவு வாபஸ்-னு சொல்லி நாடகத்தை ஆரம்பித்த தமிழினத் தலைவர்,
மனிதச்சங்கிலி, நிதிதிரட்டுதல் என நம்பவைத்து,பின்னர் ப்ராணாப்யை அனுப்புகிறோம் என கழுத்தறுத்து
கிளி நொச்சி வீழ்ந்தபின், டி.ஆர்.பாலு(திலீபன் தன் ப்ளாகில் சொன்ன மாதிரி,வடிவேல் சிரிப்பு போலிஸ்-னா இவர் சிரிப்பு மந்திரி) மூலமாக,"அவர்கள் விருந்துக்கு அழைக்கவில்லை,அதனால நாங்க ப்ராணாப்யை அனுப்பவில்லை" என வாய் கூசாமல் தமிழர்களை கேவலப்படுத்தினார்கள்.

மன்மோகன் சிங் அவர்களே,நீங்கள் இந்தியப் பிரதமரா? அல்லது சிங்களவர்களுக்கு .....??

அடுத்து காங்கிரஸ்.இழவு வீட்டில் பிணத்திலிருந்து திருடுவதற்கு ஈடான செயல் தமிழக காங்கிரஸ் தலைவர்கள்(?) செய்தது. தமிழ்குரல்-னு ஒரு ப்ளாகர் சொன்னமாதிரி,சிங்கள தூதர் அம்சாவினால்,"கொடுத்த காசுக்கு மேல கூவறான்டா கொய்யால"-னு சொல்ற அளவுக்கு வேலூர் ஞானசேகரன் புகழ் பெற்றவர்.காங்கிரஸ் மேலிடத்திடம் நல்ல பேர் வாங்க எந்த கீழ்த்தரமான
செயலையும் செய்ய தயாராக இருக்கும் தலைவர்களைக் கொண்ட த.நா காங்கிரஸ்.அதன் தற்போதைய தலைவர் தங்கபாலு பற்றி ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல!!. நீங்க இத படிச்சாலே போதும். இவர்கள் எல்லாம் ஈழத்தமிழர்களைப் பற்றி கருத்து சொல்லும் அளவிற்கு தமிழர்கள் வெட்கப்பட்டு தலைகுனிய வேண்டி இருக்கிறது.அப்புறம் ஆயுதம் கொடுக்கவில்லை என சொந்த நாட்டு மக்களிடமேபச்சை பொய் சொல்லும் காங்கிரஸ் பிரதமர்.இந்த காங்கிரஸ்காரர்கள் எந்த மூஞ்சியை வெச்சிக்கிட்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்களிடம் ஓட்டு கேட்கப்போகிறார்கள்? காஸாவில் இஸ்ரேலை கண்டிக்கும் இந்தியா பக்கத்தில் தினம் தினம் அனாதைகளாக கொல்லப்படும் ஈழத்தமிழர்களைப் பற்றி ஒரு வார்த்தை...இது எல்லாம் எந்த ஊர் நியாயம் என நினைத்துக் கொண்டேன்,பிறகு தான் தெரிந்தது
ஈழத்தமிழர்களை கொன்று,போரை முன்னின்று நடத்துவதே காங்கிரஸ் கட்சிதான் என்று.துரோகத்துக்கும் மேல் தமிழில் வேற ஏதாவது வார்த்தை இருக்கிறதா?


Noam Chomsky,சர்வதேச ஊடகங்கள் மற்றும் ஈழப்போராட்டம்

ஆனையிறவு வீழ்ந்தது என RAW செய்த பொய் பிரச்சாரத்தை அப்படியே வெளியிடும், ஈழப்போராட்டத்தை பற்றி அரைவேக்காட்டுத்தனமான அறிவு கொண்ட ibnlive,rediff. சொந்தமாகவே பொய் பிரச்சாரம் செய்யும் Hindu,தினமலர் வகையறாக்கள்.உயிரிழந்த பெண் போராளியை துவம்சம் செய்யும் சிங்கள வெறியர்கள்,ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை, கிளி நொச்சியின் வீழ்ச்சியை திட்டமிட்டு செயல்படுத்திய வஞ்சகம் மிக்க காங்கிரஸ்...இதையெல்லாம் பார்த்து ஏதும் செய்ய முடியாமல்
தலைகுனியலாம்.


அல்லது....


1.வரும் தேர்தலில் ஈழத்தமிழர்களை ஆதரிப்பவர்களுக்கு ஓட்டு போடலாம்.
2.முடிந்தவரை உற்றார்,உறவினர், நண்பர்களுக்கு இந்த இனப்படுகொலையை
நடத்தும் தமிழ் துரோகிகளை பற்றி எடுத்துக்கூறி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தாலாம்.(இது நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கும்)
3.பழ. நெடுமாறன்,வைகோ,திருமாவளவன் போன்றவர்களின் போராட்டத்தை ஆதரிக்கலாம்.
4.வெளி நாட்டு வாழ் தமிழர்கள் இலங்கை தூதரகத்தின் முன்னால்
கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தலாம்.
5.சமீபத்தில் IT துறையினர் சென்னையில் ஈழ ஆதரவு போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். அவர்களிடம் கலந்தாலோசிக்கலாம்

எனக்கு தெரிந்து ஈழம் பற்றி தொடர்ந்து எழுதும் பதிவர்கள்

Mike,
மதிபாலா(baluindo.blogspot.com),
மெல்போர்ன் கமல்,
Namakkal சிபி(pithatralgal.blogspot.com),
ஜோதிபாரதி(jothibharathi.blogspot.com),
முரளி(vayal-veli.blogspot.com)
திலீபன்(dilipan-orupuratchi.blogspot.com)
வரவனையான்(kuttapusky.blogspot.com)
அறிவிழி,
களப்பிரர்(tamilkuruthi.blogspot.com)
நாம் வேறு என்ன செய்யலாம் என்பது பற்றி சொல்லலாம்.

மற்றவர்களும் உங்கள் கருத்தினை சொல்லலாம்.
What say guys..???

25 comments:

 1. //.வரும் தேர்தலில் ஈழத்தமிழர்களை ஆதரிப்பவர்களுக்கு ஓட்டு போடலாம்.//

  இதுக்கு என் பிளாக்லே ஓட்டுப் பெட்டியே வெச்சிருக்கேன்! வந்து நீங்களும் உங்க கருத்தைச் சொல்லுங்க!

  ReplyDelete
 2. Anonymous5:03 PM

  Dear Friends,

  Here is a letter which we plan to send or hand (if we can) to President Obama and Secretary of State Clinton after January 20, 2009. We hope to have 100,000 (electronic) signatures world-wide to add to the letter. If you would like your signature to be appended to the letter, please go to the link below, click, and sign the petition.  http://www.tamilsforobama.com/sign/letter.html

  Also ask your Tamil and non-Tamil friends to help our effort by adding their signatures to the letter.  http://news.yahoo.com/s/prweb/20090108/bs_prweb/prweb1832254_2

  Thank you,

  ReplyDelete
 3. Anonymous5:20 PM

  கணினி அறிவாளிகள் முக்கியமான பதிவுகளையும்,படங்களையும் இந்திய பாராளுமன்ற உறுப்பின்ர்கள் அனைவருக்கும்,முக்கிய வெளிநாட்டு ஊடகங்களுக்கும் இணையத்தில் அனுப்பிட ஏற்பாடு செய்யலாம்.
  முகவரிகள் தொகுக்க ஒரு இடமும்,இந்தி,ஆங்கிலம் மற்ற மொழிகளில் மொழி பெயர்ப்புகளும் செய்ய முடிந்தவர்கள் உடனுக்குடன் செய்து அனுப்பி இணையத்தப் ப்யன் படுத்தி செய்திகளை முறையாக அனுப்புவது நாம் செய்யும் பேருதவியாக இருக்கும்.

  ReplyDelete
 4. Anonymous5:29 PM

  all incident document manitain ponnanum .

  ReplyDelete
 5. //all incident document manitain ponnanum//
  Thanks for the comments.I think it is very well documented by Puthinam.com,tamilnet.com
  and other Eelam websites.

  ReplyDelete
 6. //முக்கியமான பதிவுகளையும்,படங்களையும் இந்திய பாராளுமன்ற உறுப்பின்ர்கள் அனைவருக்கும்,முக்கிய வெளிநாட்டு ஊடகங்களுக்கும் இணையத்தில் அனுப்பிட ஏற்பாடு செய்யலாம்.
  முகவரிகள் தொகுக்க ஒரு இடமும்,இந்தி,ஆங்கிலம் மற்ற மொழிகளில் மொழி பெயர்ப்புகளும் செய்ய முடிந்தவர்கள் உடனுக்குடன் செய்து அனுப்பி இணையத்தப் ப்யன் படுத்தி செய்திகளை முறையாக அனுப்புவது நாம் செய்யும் பேருதவியாக இருக்கும்.//

  Thanks for the comments.Sending the pics and news to Indian parliament is of no use, bcos Indian government is actually taking part directly in this Genocide.They are very well aware of everything.
  But sending the news and pics to international media like CNN/BBC/IHT/Time/Boston globe/Newyork times might help.But they should be flooded with the same news by different people..then they will know the intensity...This is actually a very good idea...

  ReplyDelete
 7. Sure during the election Congress will say they will insist srilanka for fair settlement. And before election they would not say anything.And kailanger and dear veeramai will say to sonia how much price u will pay for this actions.

  ReplyDelete
 8. //Here is a letter which we plan to send or hand (if we can) to President Obama and Secretary of State Clinton after January 20, 2009. We hope to have 100,000 (electronic) signatures world-wide to add to the letter. If you would like your signature to be appended to the letter, please go to the link below, click, and sign the petition.
  http://www.tamilsforobama.com/sign/letter.html
  Also ask your Tamil and non-Tamil friends to help our effort by adding their signatures to the letter. //

  This sounds to be a good idea..but we need to make sure everyone is aware of this.I will ask the fellow bloggers regarding this..

  ReplyDelete
 9. //Sure during the election Congress will say they will insist srilanka for fair settlement. //
  Thanks Harrispan...But I think most people in TN who are closely watching the eelam political issue are aware of back-stabbing,cheating of this shameless congress people..
  It will surely reflect in the forthcoming parliament elections.

  ReplyDelete
 10. //இதுக்கு என் பிளாக்லே ஓட்டுப் பெட்டியே வெச்சிருக்கேன்! வந்து நீங்களும் உங்க கருத்தைச் சொல்லுங்க!//

  I have already done that sibi..

  ReplyDelete
 11. வணக்கம் நண்பரே நீங்கள் படைக்கின்ற படைப்பக்களை இசைமின்னலில் இனைத்து அதன்மூலம் மற்றவர்களும் பயனடைய உதவுமாற கேட்டுக்கொள்கின்றோம் உங்களுடைய இந்த படைப்பு எம்மால் இனைக்கப்பட்டுள்ளது
  நன்றி

  ReplyDelete
 12. Anonymous10:00 PM

  மீடியாக்களின் ஆதரவைத் திரட்டுங்கள். ஏதாவது ஒரு தொலைக்காட்ட்சியில் ஒரு வாரத்திற்கு இலங்கையில் நடைபெறுவதை ஒளிபரப்பினால் ஏற்படும் மாற்றங்களை அவதானியுங்கள்.

  மீடியா மனசு வைத்தால் கட்சிகள் அடிபணியும்

  புள்ளீராஜா

  ReplyDelete
 13. /*மீடியாக்களின் ஆதரவைத் திரட்டுங்கள். */

  தற்போது தமிழக மாற்றங்கள் ஆரம்பித்துள்ளன, குமுதம், ஆ,வி, ஜீ.வி மனித நேயங்களை, மனிதாபிமான புரிந்து அதன் படி எழுதுகின்றன. நாம் எழுதுவோம் தொடர்ந்து, தட்டி கேட்போம் யாராய்ருந்தாலும் தவறு செய்யும் போது, கருணாநிதியை இந்த சுயநலமற்ற பதிவர்கள் தட்டி கேட்கும் போது மனது குளிர்கிறது. மக்களுக்காக உழைக்கும் இவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

  நம்மால் முடிந்த அளவு, நாமும் இவர்களுடன் உழைத்து, உண்மை மக்களுக்கு அறிய, விளங்க வைப்பதற்கு பாடுபடுவோம்.

  Mike,
  மதிபாலா(baluindo.blogspot.com),
  மெல்போர்ன் கமல்,
  Namakkal சிபி(pithatralgal.blogspot.com),
  ஜோதிபாரதி(jothibharathi.blogspot.com),
  முரளி(vayal-veli.blogspot.com)
  திலீபன்(dilipan-orupuratchi.blogspot.com)
  வரவனையான்(kuttapusky.blogspot.com)
  அறிவிழி,
  களப்பிரர்(tamilkuruthi.blogspot.com)

  நான் ஆரம்பித்து விட்டேன் ஒரு பிளாக் ஏதாவது என்னால் முடிந்தது. http://nilavupattu.blogspot.com/

  நாமும் குரல் கொடுப்போம் இவர்களுடன் இணைந்து. இரு கை சேர்ந்தால் ஓசை.

  ReplyDelete
 14. Hi Nilavupaathu,
  Thanks for the comments and your contribution.
  --Senthil

  ReplyDelete
 15. Anonymous11:04 AM

  பி.பி.சி ஆங்கில செய்த்தியாளர் இலங்கை நெருக்கடிகளை ஓரளவு நேர்மையோடு எழுதுகின்றார். ஆனால் பி.பிசி தமிழோசை திட்டமிட்டு ஈழ விடுதலைக்கு எதிரானவர்களையே நேர்காணலில் அழைத்து நாசூக்காக விச் விதைகளைப் பரப்புகின்றார்கள்.

  முடிந்தால் சர்வ்தேச ஆங்கில ஊடகங்களுக்கு எழுதுங்கள். ஊடக்கங்களில் அடிக்கடி காண்பிக்கப்படும் செய்திதான் அரசியல் முக்கியத்துவம் அடைகின்றன.

  புள்ளிராஜா

  ReplyDelete
 16. Anonymous11:07 AM

  பி.பி.சி ஆங்கில செய்த்தியாளர் இலங்கை நெருக்கடிகளை ஓரளவு நேர்மையோடு எழுதுகின்றார். ஆனால் பி.பிசி தமிழோசை திட்டமிட்டு ஈழ விடுதலைக்கு எதிரானவர்களையே நேர்காணலில் அழைத்து நாசூக்காக விச் விதைகளைப் பரப்புகின்றார்கள்.

  முடிந்தால் சர்வ்தேச ஆங்கில ஊடகங்களுக்கு எழுதுங்கள். ஊடக்கங்களில் அடிக்கடி காண்பிக்கப்படும் செய்திதான் அரசியல் முக்கியத்துவம் அடைகின்றன.

  புள்ளிராஜா

  ReplyDelete
 17. //முடிந்தால் சர்வ்தேச ஆங்கில ஊடகங்களுக்கு எழுதுங்கள். ஊடக்கங்களில் அடிக்கடி காண்பிக்கப்படும் செய்திதான் அரசியல் முக்கியத்துவம் அடைகின்றன. //

  Thanks Pulliraaja.
  I am trying to mobilise people to send mails
  to these international media..

  ReplyDelete
 18. முயற்சிப்போம் முடியும் தமிழ் ஈழம் வெல்லும்

  ReplyDelete
 19. ஈழ தமிழர்களும் தமிழ்நாட்டு தமிழர்களும் ஒரே இரத்தம் என்றால் ஏன் ஈழத்தை தமிழ்நாட்டோடு இணைக்க கூடாது? இதன் மூலம் ஈழ தமிழர்களின் படுகொலைகளை நிறுத்தலாம் இல்லையா?>

  ReplyDelete
 20. மிக‌ ந‌ல்ல‌ முய‌ற்சி,
  இங்குள்ள‌ அனைவ‌ரும் குழுவாக‌ சேர்ந்து த‌மிழீழ‌ ஆத‌ர‌வு வார‌ இத‌ழ்க‌ள், தொலைக்காட்சிக‌ளுக்கு ந‌ம்முடைய‌ ஆத‌ர‌வை தெரிவிப்ப‌து. இப்ப‌டி செய்வ‌து அவ‌ர்க‌ளுக்கு ஊக்க‌ம‌ளிக்கும், மேலும் அவ‌ர்க‌ள் இவ்வாரான‌ நிக‌ழ்ச்சிக‌ளை அதிக‌ம் வ‌ழ‌ங்குவார்க‌ள்...ந‌ல்ல‌ ப‌ல‌னை கொடுக்கும் என்று நினைக்கின்றேன்.........ம‌ற்றும் த‌மிழின‌ எதிர்ப்பு நாளித‌ழ்க‌ளின் ம‌ன‌நிலை மாற‌ வாய்ப்புண்டு....
  தின‌ம‌ணியில் நடேசன் அவ‌ர்க‌ளின் பேட்டி ந‌ல்ல‌ மாற்ற‌ம்தான்(அதிசய‌ம்தான்)., ஆனால் அவ‌ர்க‌ள் முழுவ‌துமாக‌ மாறிவிடுவார்க‌ள் என்று ந‌ம்ப‌ முடியாது....

  ReplyDelete
 21. Anonymous11:33 AM

  பதிவுக்கு முதலில் நன்றிகள் சகோதரா...

  ReplyDelete
 22. Anonymous11:40 AM

  1983க்கு பின் இறந்தவர்கள் எண்ணிக்கையை இலங்கை அரசும் மீடியாக்களும் 80 ஆயிரம் என்று கடந்த 15 ஆண்டுகளாக எழுதுகின்றார்கள். அமெரிக்க ஆய்வு மையம் இந்த எண்ணிக்கை தவ்று எனவும் சுமார் 3.5 இலட்சம் என தெரிவிக்கின்றது. உண்மையும் அதுதான். தமிழக அரசும், தமிழக ஏடுகளுக்கூட அரசு சொல்வதுபோன்று 80 ஆயிரம் என்றே கடந்த 15 ஆண்டுகளாக சொல்வதைக் கவனித்தால் அடுத்து நாம் என்ன செய்யவேண்டும் என்பது தானாக புரிந்துவிடும்.


  புள்ளிராஜா

  ReplyDelete
 23. மதி11:52 AM

  ஈழம் பற்றிய எழுதுபவர்களுக்கு நமது வாக்கினை அளிக்கலாம், அவர்களை பிரபல பதிவர்களாக மாற்றலாம். அவர்களை உற்சாகப்படுத்தலாம். நாமும் எழுதுவோம் ஈழம் பற்றி.

  ReplyDelete
 24. Anonymous8:40 PM

  வெத்து வேட்டு
  ஈழ தமிழர்களும் தமிழ்நாட்டு தமிழர்களும் ஒரே இரத்தம் என்றால் ஏன் ஈழத்தை தமிழ்நாட்டோடு இணைக்க கூடாது? இதன் மூலம் ஈழ தமிழர்களின் படுகொலைகளை நிறுத்தலாம் இல்லையா?

  வெத்து வேட்டுவின் கருத்து மிக சிறந்ததே.ஈழ தமிழர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு ஒரே இரத்தமான தமிழ்நாட்டு தமிழர்களுடன் இணையும் போது மட்டுமே கிடைக்கும்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

Email Subscriptions powered by FeedBlitz

Your email address:


Powered by FeedBlitz