Monday, January 28, 2008

வழுத்தினாள் தும்மினேனாக...

முதல்ல McLuhan law பற்றி, அப்புறம் "வழுத்தினாள்"-க்கு வருவோம்.
மக்லூகனின் கோட்பாடுகள், தற்கால blogging வரை ஒத்துப்போகிறது.
கனடா நாட்டை சேர்ந்த ஊடக விஞ்ஞானி அவர்.ஊடகங்களின் தொழில் நுட்பங்கள்
அழிவதில்லை, மாறாக அது உருமாறி வேறு பரிணாமத்தில், வேறு புதிய தகவல்களுடன்
வருகிறது என்கிறார். உ.தா. சுஜாதா சார் சொன்ன மாதிரி...
அந்த காலத்தில் 1960, 70-களில் நிறைய கையெழுத்து பத்திரிக்கைகள் வெளிவந்தன.
அது அவரவர்களின் படைப்புக்களை தாங்கி வந்தன.இப்பொழுது ப்பாளக்கிங்!
அதே சொந்த படைப்புகள் தான்,சொந்த விளம்பரம் தான், ஆனால் புதிய பரிணாமம்!.
சொல்ல வந்த தகவல்களின் முறையில் டெக்னாலஜி புகுந்திருக்கிறது,மற்றபடி
அதன் அடி நாதமான,தனது பார்வைகளை சொல்லுதல், மற்றும்
Andy warhol சொன்ன பதினைந்து நிமிட புகழ்.....மாறவே இல்லை!!

பெங்களூர் PVR தியேட்டரில் படம் பார்த்தவர்களுக்கு தெரியும்,படம் ஒடும் போது
சிகப்பு சட்டை அணிந்து கொண்டு, மெனு கார்டை நீட்டி பெப்சி, கோக் விற்பார்கள்.
எங்க தர்மபுரி தியேட்டரில் படம் பார்க்கும் போது சின்ன பசங்க போண்டா, பஜ்ஜி 
விற்பார்கள்.என்ன PVR-ல் ஆங்கிலம் பேசுகிறார்கள், அநியாய விலைக்கு விற்கிறார்கள், 
மற்றபடி எல்லாம் வியாபாரம் தான். இதுவும் மக்லூகன் கோட்பாடா?? தெரியவில்லை.

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினிர் என்று.

வழுத்தினாள்- வாழ்த்தினாள்.
காதலன் தும்மியவுடன், காதலி நூற்றாண்டு வாழ்க என வாழ்த்தினாளாம்,
பின்னர், உன்னை எப்போதுமே நினைக்கும் நான் இங்கு இருக்க, வேற யார்
(எந்த பெண்) உன்னை நினைக்கிறார்கள் என ஊடல் கொண்டாலாம்..!

உள்ளினேன் என்றேன் மற்று என்மறந்தீர் என்றென்னப்
புல்லாள் புலத்தக் கனள்.

நினைத்தேன் என்று கூறினேன், நினைப்புக்கு முன் மறுப்பு உண்டா?
ஏன் மறந்தீர், என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.

Amazing, quite a possessive lover..!!
Fine..
இது தான் உண்மைக் காதலா..?
காதலி இப்படித் தான் இருப்பாளா.
இந்த குறள் எல்லாம் ஏன் பள்ளிக்கூடப் பாடத்தில் 
சொல்லித்தரல.

10 comments:

  1. Anonymous11:29 PM

    Naanum than pala thadava thummarein...
    Yein enna nu kaeka oru nai kooda illa.... enna olugamada saami!!

    ReplyDelete
  2. திருகுறளுக்கு அழகாக விளக்கம் கொடுத்திருக்கிறீங்க.

    இந்த குறள் எல்லாம் ஏன் ஸ்கூல்ல சொல்லித்தரலன்னு நீங்க ஆதங்கப்படுவது நியாயமானதே!

    Possesivness is an awesome charachter, which is enjoyable in Love![but too much of possesiveness is dangerious too]

    [பள்ளி பருவத்தில், 'தலைவன்' 'தலைவி' காதல், ஊடல் என்றெல்லாம் அர்த்தம் உள்ள குறள் இருந்த மாணவர்கள் விரும்பி குறள்களை படிப்பார்கள் என்று கருதுவதால் அப்படி சொன்னீர்களோ??.....Just kidding]

    ReplyDelete
  3. Anonymous11:43 PM

    Naaa irukaen jiya.... Naan dhaan ungala nenachu nenachu uruguraen ;)
    :P

    ReplyDelete
  4. Anonymous11:47 PM

    naaa irukaen jiya ungalukku....
    ungalaiyae nenachu urugitu irukaen...
    ungal thummaluku kaaranam naanae!!!

    ReplyDelete
  5. jiya,
    LOL..
    nachhunu ketta machi :)

    dei crashonsen,
    ennamo law ellam solreda.. onnum puriyala po..

    ReplyDelete
  6. அருமையான குறிப்புகள்.

    //இந்த குறள் எல்லாம் ஏன் பள்ளிக்கூடப் பாடத்தில்
    சொல்லித்தரல.//
    இவை பாடத்தில்தான் வரவில்லை. ஆனால் படித்தது பள்ளிக்கூடத்தில்தான்.
    ஆண்டு விழா, இலக்கிய விழா என்று பல விழாக்களில் தமிழறிஞர்கள் பலர் இதையெல்லாம் சுவைபட சொல்லித் தந்தனர்.

    ReplyDelete
  7. Really really good Senthil. rendukkum enna sammantham endru en arivukku etta villai. Irunthum irandum piramatham. :)

    McLuhan ethai ninaithu sonnaro theriyavillai. Anal puthupithalai puthumaiyakkum intha ulagai sandraga kooriyathu arumai.

    McLuhan sonnathu etho unmai yaitru. Anal valluvan varthaigal meiyaga iruppathu santhegame. naan kuripitathu intha oodalil.

    Azhagana vilakkangal. Eninum iruthiyil neer ketta kelvi konjam varuthame (ithu thaan unmai kathala??) I hope you understood what I meant.

    I wish you to get more time to write similar blogs.

    ReplyDelete
  8. ஜீவிக.....

    ReplyDelete
  9. Anonymous11:26 PM

    1330 kural irukka yeppadi ithai pidichae . nalla villakam . siru siru oodal thaan kathalai innum inimaiyakuthu . yean intha kural yellam namma syllabus'la varala yendra un kelviyai padikkum pothu, en mugathil sannamai oru punnagai keetru padarnthathu .

    padithaen , rasithaen. ippadi chellamai kadinthu kolla seekiramae oruthi thozhiyai, thunaiviyai ,thalaiviyai
    [ thalai valiyai alla ] amaya vazthukal.[
    jiya'vukkum thaan...naikalai vidungal nangaiyarae amaivar]
    anbudan,
    lavanya sundaram

    ReplyDelete
  10. Hi.. அருமையான குறிப்புகள். Everything was good.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

Email Subscriptions powered by FeedBlitz

Your email address:


Powered by FeedBlitz