இலண்டன் மாநகரில் மழை பெய்து ஓய்ந்த ஒரு பொன்மாலைபொழுது.
மேற்கத்திய பாப், ஹிப் ஹாப் இசையும், வருடாந்திர ஏடிபி டென்னிஸ்சையும்
கண்ட பிரும்மாண்ட O2 அரங்கில் இன்று இளையராஜாவின் ராஜா தி ராஜா (Raja The Raja).இளையராஜாவே வழங்கும் இசை நிகழ்ச்சி என்பதால் எதிர்பார்ப்பும் ஆர்வமும் சற்று அதிகமாகவே இருந்தது.கமல் ஹாசனும் வர இருப்பதால் சொல்லவா வேண்டும்..?
பட்டு சேலை அணிந்த மங்கைகளையும்,ஜொலிக்கும் தேவதைகளையும், மழலை ஆங்கிலம் பேசும் (இல்லைங்க அது தமிழ் தான் !!) குழந்தைகளையும் ஒருசேர பார்த்த, டிக்கெட் சரிபார்க்கும் வெள்ளைக்காரர் சற்றே அசந்து தான் போனார்.
You may like When you get married
தன் ராஜாங்கத்தை ஜனனி ஜனனி-யில் தான் ஆரம்பித்தார்.சின்மயீ "அன்னக்கிளி உன்னத்தேடுது " இரண்டாவது சரணத்தை தவற விட, சரி செய்து பாட சொல்லி மேடையில் பாடுவதின் சிரமத்தை சொன்னார். ."கொடியிலே மல்லிகைபூ" சின்மயீயும் ,ஜெயச்சந்திரனும் பாடினார்.
ஷைலஜாவின் "ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது" கேட்கும் பொழுது சிறுவயதில் ஆல் இந்திய ரேடியோவில் கேட்ட அதே இனிமை.
You may like ஷ்ராவனியின் டயரி
கார்த்திக் இரண்டு மூன்று பாடல்கள் தான் பாடினார்."என் இனிய பொன் நில்லாவே " அந்த மாலையின் இசை மயக்கம்.ஸ்வேதா மோகன் (சுஜாதாவின் புதல்வி)பாடிய "அடி ஆத்தாடி","மாங்குயிலே பூங்குயிலே" லயிக்க வைத்தன.
வசந்தா ராகத்தில் படைக்கப்பட்ட "அந்திமழை பொழிகிறது" ராஜாவுக்கும் பாடிய எஸ்.பி.பி-கும் அவர்களின் மேக்னம்ஓபஸ்களுள் ஒன்று.ராஜா, தான் அதில் தன் குருநாதர் டி.வி.கோபாலக்ரிஷ்ணனை ஹம்மிங் பாடவைத்தது பற்றி சொன்னார்.
அழும் குழந்தை போலத்தான் பாடல் கேட்டு செல்லும் நாங்களும், ராஜாதான் ஏன் குழந்தை அழுகிறது,அதற்கு என்ன வேண்டும் என்று பீடியாற்றிசியன் போல அறிந்து எங்களுக்கு என்ன மாதிரி பாடல் வேண்டுமோ அதை கொடுக்க வேண்டும் என்று சொன்ன கமல் அதற்கு உதாரணமாக "இஞ்சி இடுப்பழகா"
பிறந்த கதையை சொன்னார்.
"நான் தேடும் செவ்வந்தி பூவிது" ,"ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா" ராஜா
பாடும் போது சொக்கித்தான் போனோம்.கிடத்தட்ட நான்கரை மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பி இசை ஆளுமையில் ராஜா ஒரு ராட்சஸன் என்றார்.இல்லை தான் சரஸ்வதியின் பிள்ளை என்றார் ராஜா.
சரஸ்வதியின் பிள்ளை கடைசி பாடலாய் "தென்பாண்டி சீமையிலே" பாட்டின் மெட்டில் பாடியது.
"எங்கோர் மண்ணில் பிறந்தாலும் ,எங்கோர் மண்ணில் வாழ்ந்தாலும்,
உனையும் எனையும் இணைப்பதெல்லாம்,
உயிரின் மேலாய் இசை தானே.
உன்வாழ்வின் சிலநொடிகள்
என் வாழ்வின் சிலநொடிகள்
என்றென்றும் நினைவில் நிற்கும்
இன்நொடி தானே இன்நொடி தானே

மீளாத சோகம் என்ன
தாளாத துயரம் என்ன
சொல்லாமல் துடைப்பது என் இசை தானே
என் இசை தானே
என் இசை தானே
ஏழேலு கடல் கடந்து,
இங்கு வந்து வாழ்பவனே
என்றென்றும் உமக்கெனவே
என்றென்றும் உமக்கெனவே
இசை கொடுப்பேனே
இசை கொடுப்பேனே "
ராஜா-மேனியா O2 அரங்கில்!இசை கொடுப்பேனே "
No comments:
Post a Comment