போன வாரம் விஜய் டிவி அவார்ட்ஸ் பார்த்த போது தான் எவ்வளவு நல்ல
படங்களை/ பாடல்களை பார்க்கவில்லை என்பது தெரிந்தது .பார்க்கத் தவறிய நல்ல
படம் -தெய்வத் திருமகள். நல்ல பாடல் - சர சர சார காத்து.இந்த பாடலை எப்படி
விட்டேன் என தெரியவில்லை.இந்த பாடலுக்குதான் சின்மயி,வைரமுத்து
விற்கு முறையே சிறந்த பின்னணி பாடகர் ,பாடலாசிரியர் விருது
கிடைத்தது.
கிட்டதட்ட எல்லா பிரிவுகளிலும் ஆரண்ய காண்டம் நியமிக்கபட்டிருந்தது .
எங்கிருந்தது வந்தார் இந்த ஆரண்ய காண்டம் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா.முதல் படத்திலேயே எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.படம் பார்த்தவர்கள் எவ்வளவு பேர் அந்த ஆக்ரோஷ சண்டையுனோடு வரும் அந்த tempo கூடிக் கொண்டே செல்லும் பின்னணி இசையை கவனித்தீர்கள். போர்களத்தில் ரோஜா இதழ்களை காண்பிப்பது போல...what a (ironic) rendition.
சிறந்த பின்னணி இசை இந்த படத்திற்குதான்-ராஜாவின் புதல்வனுக்கு.அதே பின்னணி இசையை விஜய் அவார்ட்ஸ் teaser-க்கு பயன்படுத்தியிருந்தார்கள்.அந்த கொடுக்காபுளி,சுப்பு கதாபாத்திரங்கள் தமிழிற்கு புதிது.ஆணாதிக்க உலகத்தில் தான் அனுபவகிக்க நேர்ந்த வக்கிரங்களுக்கு அநாயசயமாக பழிவாங்கி, பணத்தை லவட்டி கொண்டு Best thing about a women is..it is a mans world என்கிறார் சுப்பு(யாஸ்மின் பொன்னப்பா). படம் பல் வேறு கோணங்களிலிருந்து நிதானமாக சொல்லப்படுகிறது.நம்ப ஊர் Quentin Tarantino என்கிறார்கள் தியாகராஜன் குமாரராஜாவை. சிறந்த திரைகதை விருது இவருக்கு தான்.நேரம் கிடைத்தால் பார்த்துவிடுங்கள்.
எங்கேயும் எப்போதும், ஆடுகளம்,கோ -இவை மூன்றும் நிறைய பிரிவுகளில் விருது வாங்கியிருந்தன.எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு செவாலியே சிவாஜி கணேசன் விருது.மேடையில் ஏ.ஆர்.ஆர் ,கமல், எஸ்.பி.பி . தன்னுடைய துறையில் வானத்தை தொட்டுவிட்டு மூன்று பேரும் ஏதும் அறியாதது போல சாதாரணமாக பேசினார்கள், கே.பி, பாலு மகேந்திராவும் அப்படியே.நிறை குடம்.
தென்னமெரிக்க மங்கைகள் நடனமாடினார்கள்.(இதை தான் டி வி நிகழ்ச்சிகளை அடுத்த லெவலுக்கு கொண்டுப்போவது என்பதா..?).அஞ்சலி எங்கேயும் எப்போதும் படத்திற்கு சிறந்த விருதை நம்ப சிம்ரனிடம் இருந்து பெற்றார்.விஸ்வரூபம் டீசர் காட்டினார்கள்.படம் எப்போ கமல் சார்...?
சர சர சார காத்து, ஆரண்ய காண்டம்-BGM, யூ டியூப் -இல் தேடிக்கொள்ளுங்கள்.
ஜெஸ்சி ஜே அறிந்திராதவர்களுக்கு ..இதோ

No comments:
Post a Comment