La Belle Dame Sans Merci..!! Part 1
அழகிய இரக்கமற்ற பெண்ணே..!! Part 2
நேற்று, அந்திம நேரம் கடந்து இன்னர் ரிங் ரோடில் பைக்கை நிறுத்தி பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள், யாரோ நாலு பேர் காரில் வந்திருக்கிறார்கள், உருட்டுக் கட்டை, பேட், ஹாக்கி ஸ்டிக் எல்லாம் கொண்டு வினய்-யை தாக்கியிருக்கிறார்கள். இந்திரா நகர் சப்-இன்ஸ்பெக்டர் வந்திருந்தார். பாலுவும் அவரும் ஏதோ பால்ய சிநேகிதர்கள் போல பேசிக்கொண்டனர்.
"சார், இவர் என் பாஸ்"
"பாஸ், இவர் நஞ்சுண்டப்பா, சப்-இன்ஸ்பெக்டர்"
"க்ரைம் இன்னர் ரிங் ரோடில் நடந்ததனால நான் விசாரிக்க வேண்டி இருக்கு"
சலித்துக் கொண்டார். 45 அல்லது 50 வயது இருக்கலாம். பியர் தொப்பை. எதற்காக கூலிங் கிளாஸை கழட்டாமல் இருக்கிறார்? தெரியவில்லை.
"எப்படிடா போலிஸ் எல்லாம் பழக்கம்"
"அக்க்ஷயா பார்-ல நாங்களாம் ரெகுலர் கஸ்டமர்ஸ், Smirnoff உள்ள போச்சினா, எங்க உலகத்துல யாரும் வர முடியாது"
"நீ திருந்த மாட்டடா"
நான், நஞ்சுண்டப்பா, பாலு, ப்ரீத்தி மட்டும் தனியாக இருந்தோம். கன்னடா-வில் கேள்வி கேட்டார்.
"சரியா எத்தனை மணிக்கு நீங்க ரிங் ரோட்ல இருந்தீங்க"
"எட்டு எட்டரை மணி இருக்கும்"
கொஞ்சம் தேம்பினாள், விம்மினாள், அழுதாள்.
"அதுக்கு முன்னாடி எங்க போனீங்க"
"பாரிஸ்டா காபி பார்"
"எந்த பாரிஸ்டா"
"கோரமங்களா 5-வது பிளாக்"
"அப்புறம்"
"இன்னர் ரிங் ரோட்ல, அந்த சின்ன பிரிட்ஜ் கிட்ட நின்னுட்டு இருந்தோம்,
flight landing point-la"
"அது என்னடா ப்ளைட் லேண்டிங் பாய்ண்ட்" இது நான்.
"பாஸ், IRR-ரோட்ல, ஏர்போர்ட் போற வழியில, ஈஜிபுரா சிக்னல் தாண்டி, அந்த சின்ன பிரிட்ஜ்-ல இருந்து பாத்தா ப்ளைட் லேண்ட் ஆகுறது நல்லா தெரியும், இப்ப புது ஏர்போர்ட் தேவனஹள்ளிக்கு போயிட்டதால, அது காதலர்களுக்கு மறைவான இடம்"
"ம்ம்ம்"
"எவ்வளவு பேர் வந்தாங்க"
"நாலஞ்சு பேர் இருப்பாங்க"
"எதுல வந்தாங்க"
"நான் கவனிக்கல"
மறுபடியும் அழுதாள். எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும். எப்படி எப்படி எல்லாம் வாழவேண்டும் என யோசித்திருப்பார்கள். எவ்வளவு அந்நியோன்யமாக வண்டியில் அவனை அணைத்துக்கொண்டாள். இப்பொழுது அவன் உயிறற்று, இவள் அவன் நினைவுகளோடு மட்டும். வள்ளுவன் சொன்ன "நெருநெல் உளனொருவன்.."தான் ஞாபகம் வந்தது.
இன்னும் கொஞ்சம் கேள்வி கேட்டார்.
பின்னர் கொஞ்சம் தேறியவுடன் கேட்கலாம்
என விட்டுவிட்டார்.வெளியே வந்தோம்.
"எஃப்.ஐ.ஆர் போடனும், எவிடன்ஸ் சேகரிக்கனும்,
டாக்டர் சர்டிபிகேட், பி.எம் ரிப்போர்ட் எல்லாம் வேணும்,
லாங் வே டு கோ, இந்த சாப்ட்வேர் வந்ததுல இருந்து
குற்றம் அதிகமாயிடுச்சி"என்றார்.
நாங்கள் கிளம்பும்போது தான் பாலு, இன்ஸ்பெக்டரிடம் சொன்னான்.
"சார், நீங்க ஒரு முறை சுதா-வ விசாரிச்சிடுங்க"
"யாரிந்த சுதா?"
"வினய்-யோட முன்னால் கேர்ள்பிரண்ட்"
-------
இந்த தொடர்கதையை அதிகாலை.காம் இணையதளத்திலும் படிக்கலாம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=7273&Itemid=164