எனக்கும் Murphy's law-கும் எப்பவும் ரொம்ப அ ந் நியோன்யம் உண்டு.
எப்பவும் நான் காதலிக்கிற பெண்களுக்கு தான் சீக்கிரம் கல்யாணம் ஆகும்.
நான் ஏறுகிற பேருந்து தான் break down ஆகும்.இப்படி நிறைய...
Fine, இந்த கதை நான் காதலித்த தேவதைகளைப் பற்றி அல்ல...!
வழக்கம் போல கிருஷ்ணகிரி-யில் பேருந்து மாறி, பெங்களூர்
செல்லும் பேருந்தில் ஏறினேன். பக்கத்தில் செவப்பு சட்டையும்,
மஞ்சள் சட்டையும் அணி ந்த இரண்டு பேர் அமர் ந் தார்கள்.
இளைஞர்கள்.பெங்களூரில் மேஸ்திரி,கார வேலை செய்பவர்கள் போல.
"ட்ரைவர் சார் படம் போடு சார்"--இது செவப்பு சட்டை.
"ஆமா சார், விக்ரம் படம் போடு சார், என்ன மாப்ல நா சொல்லரது"---இது மஞ்சள் சட்டை.
"ஆங்"
"என்ன மாப்ல ட்ரைவர் கண்டுக்கவே மாட்ராரு"
"இது ஆவரது இல்ல மாப்ல"
பேருந்து புறப்பட்டது.ஒழுங்கா தான் போயிட்டிருந்தது.
கிட்டதட்ட ஓசூர்-அ நெருங்கி கொண்டிருந்தது.
"என்னப்பா யாரும் டிக்கடே வாங்கலே"--பின்னாடி இருந்து ஒரு குரல்.
"கண்டக்டர் எங்கப்பா"
"என்னது கண்டக்டரே இல்லயா"
"நல்லா தேடிபாருங்கப்பா"
"பஸ்ஸ நிருத்துங்கப்ப"
பேருந்து கிறீச்சிட்டு நின்றது.
"என்னயா பிரச்சனை"-இது ட்ரைவர்.
"கண்டக்டர் ஏரல சார்"
"என்னய சொல்றீங்க?!"
"ஆமா சார், கண்டக்டர காணல"
"நான் அப்பவே நினைச்சேன் சார்"-இது ஒரு பெரியவர்.
"யோவ் பெரிசு,அப்பவே சொல்லி தொலைக்கவேண்டியது தானே"
"கட்டைல போர ட்ரைவரு,கண்டக்டர் இல்லாதது கூட
தெரியாம என்னய பஸ்ஸ ஓட்டுர"--இது ஓரு தாய்குலம்.
"எல்லாம் அமைதிய இருங்க, கண்டக்டர் அடுத்த பஸ்-ல
எப்படியும் வந்துருவாரு..."--இது ட்ரைவர்.
"சரி ஆனது ஆகி போச்சு,கண்டக்டர் வர வரைக்கும்
ஒரு படம் போடு சார்,என்ன மாப்ல நான்
சொல்ரது"--இது செவப்பு சட்டை.
"ஆங்"
"திஸ் இஸ் ரிட்டிகுலஸ்,அப்சர்ட் "--இது என் முன்னாடி உட்கார்ந்திருந்தவர்.
அமெரிக்க வாழ் இந்திய மென்பொருளாலர் போல.
"என்ன மாப்ல சொல்ராரு அவரு "
"இங்லீஸ் படம் போட சொல்ராரு போல கீது"
"யோவ் சும்மா இருங்கப்ப"
அடுத்த வந்த பஸ்ல இருந்து கண்டக்டர் அவசரமாக
இறங்கி வந்தார்.
வந்தவர் முதல்ல கேட்ட கேள்வி ,"யாருயா, நான் பஸ் கதவு
பக்கம் இருந்த போது விசில் அடிச்சி ரைட் சொன்னது"
பேருந்தில் பெரும் நிசப்தம்.
செவப்பு சட்டையும் மஞ்சள் சட்டையும்
கண்டக்டரையே பார்த்துக்கொண்டிருந்தனர்.
கண்டக்டர் ரைட் சொல்ல மீண்டும் பேருந்து
புறப்பட்டது.
ட்ரைவர் என்ன நினைத்தரோ தெரியல "தூள்" படம் போட்டார்.
"இத முன்னாடியே போட்டிருந்த நாம்ப விசில் அடிச்சி
ரைட் சொல்லிருந்திருப்பமா, என்ன மாப்ல நா சொல்ரது"
"ஆங்"
Fine, jokes apart.
I keep pondering,being a software engineer
whether I do have the same enthusiasm that
those two guys have?