சுஜாதா, தமிழகத்தின் முதல் பத்து மோசடிகளில், தொலைகாட்சியில் வரும், அந்த தொலைபேசியில் பேசி தனக்கு பிடித்தமான பாடலை கேட்கும் நிகழ்ச்சியை குறிப்பிட்டிருந்தார்.அந்த நிகழ்ச்சியில் தொலைபேசுபவர்களின் psychology,எதிர்பார்புகள் முதலில் எனக்கு புரியவில்லை. சாப்டீங்களா, என்ன சமையல், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க,காதல் பத்தி என்ன நினைக்கறீங்க,எவ்வளவு பேரை காதலிச்சிருகீங்க போன்ற தேவையற்ற விசாரிப்புகள்,செயற்கை சிரிப்புகள்,துள்ளல்கள் தான் அதிகம் பார்க்க முடிகிறது.
Andy warhol சொன்ன "In the future everyone will have their fifteen minutes of fame" என்ற அவரது கூற்று தான் நினைவிற்க்கு வருகிறது.எதிர்க்காலத்தில் எல்லா மனிதர்களும் ஒரு பதினைந்து நிமிடமாவது புகழின் உச்சியில் இருப்பார்கள் என்றார். ஊடகங்களின் வளர்ச்சியை நினைவில் கொண்டு அவர் சொன்ன அந்த கூற்று இப்போது ஒரு வகையில் உண்மையாகிக்கொண்டிருகிறது.சன் music-ல பேசுகின்ற தொலைகாட்சி நேயர்கள் எல்லோரும் அந்த பதினைந்து நிமிட புகழுக்கு சொந்தக்காராகள்.தன்னுடைய குரல் தொலைகாட்சியில் அறியப்படும்போது ஒருவித சந்தோசம்.என் நண்பனுக்கு Hema Sinha-விடம் பேசினால் மோட்சம் அடைந்தது போல. எல்லா மனிதர்களும் ஒரு விதமான புகழ்போதைக்கு அடிமையானவர்கள். நான்,இதை படித்து கொண்டிருகின்ற நீங்கள்,எல்லோரும் புகழுக்காக ஏங்குபவர்கள் என்றே நினைகிறேன்.
இது போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் அந்த பதினைந்து நிமிட புகழ் எளிதில் கிடைத்துவிடுகிறது.
சென்னை போயிருந்த போது, ரேடியோ மிர்ச்சியில் ஒரு சுவாரச்யமான உரையாடல் கேட்டேன்.
துள்ளலான,சற்றே freak-ஆன ஆண் குரல் --நிகழ்ச்சி நடத்துனர்,
"Hello,உஙக பேர் என்னஙக"
ஒரு இனிமையான,அழகான பெண் குரல் பேசியது.
"அமிர்த வர்ஷினி"
"சொல்லுங்க அமிர்த வர்ஷினி, என்ன செய்யறீங்க"
"அழகான பெளர்ணமி நிலவை ரசிச்சிட்டிருக்கிறேன்"
சற்றே ஜெர்க்கான நிகழச்சி நடத்துனர்,"சரி, என்ன பாடல் வேணும்க"
"சுட்டும் விழிச்சுடரே....."
"யாருக்கு டெடிக்கேட் பன்ணனும்"
"எனக்கும், இந்த அழகான பெளர்ணமி நிலவுக்கும்"
"...!!###$$"
அந்த அழகான அமிர்த வர்ஷினிக்கு இதுவரை காதலன் கிடைத்திருக்க கூடாது என கடவுளை வேண்டுகிறேன்.