Monday, January 28, 2008

வழுத்தினாள் தும்மினேனாக...

முதல்ல McLuhan law பற்றி, அப்புறம் "வழுத்தினாள்"-க்கு வருவோம்.
மக்லூகனின் கோட்பாடுகள், தற்கால blogging வரை ஒத்துப்போகிறது.
கனடா நாட்டை சேர்ந்த ஊடக விஞ்ஞானி அவர்.ஊடகங்களின் தொழில் நுட்பங்கள்
அழிவதில்லை, மாறாக அது உருமாறி வேறு பரிணாமத்தில், வேறு புதிய தகவல்களுடன்
வருகிறது என்கிறார். உ.தா. சுஜாதா சார் சொன்ன மாதிரி...
அந்த காலத்தில் 1960, 70-களில் நிறைய கையெழுத்து பத்திரிக்கைகள் வெளிவந்தன.
அது அவரவர்களின் படைப்புக்களை தாங்கி வந்தன.இப்பொழுது ப்பாளக்கிங்!
அதே சொந்த படைப்புகள் தான்,சொந்த விளம்பரம் தான், ஆனால் புதிய பரிணாமம்!.
சொல்ல வந்த தகவல்களின் முறையில் டெக்னாலஜி புகுந்திருக்கிறது,மற்றபடி
அதன் அடி நாதமான,தனது பார்வைகளை சொல்லுதல், மற்றும்
Andy warhol சொன்ன பதினைந்து நிமிட புகழ்.....மாறவே இல்லை!!

பெங்களூர் PVR தியேட்டரில் படம் பார்த்தவர்களுக்கு தெரியும்,படம் ஒடும் போது
சிகப்பு சட்டை அணிந்து கொண்டு, மெனு கார்டை நீட்டி பெப்சி, கோக் விற்பார்கள்.
எங்க தர்மபுரி தியேட்டரில் படம் பார்க்கும் போது சின்ன பசங்க போண்டா, பஜ்ஜி 
விற்பார்கள்.என்ன PVR-ல் ஆங்கிலம் பேசுகிறார்கள், அநியாய விலைக்கு விற்கிறார்கள், 
மற்றபடி எல்லாம் வியாபாரம் தான். இதுவும் மக்லூகன் கோட்பாடா?? தெரியவில்லை.

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினிர் என்று.

வழுத்தினாள்- வாழ்த்தினாள்.
காதலன் தும்மியவுடன், காதலி நூற்றாண்டு வாழ்க என வாழ்த்தினாளாம்,
பின்னர், உன்னை எப்போதுமே நினைக்கும் நான் இங்கு இருக்க, வேற யார்
(எந்த பெண்) உன்னை நினைக்கிறார்கள் என ஊடல் கொண்டாலாம்..!

உள்ளினேன் என்றேன் மற்று என்மறந்தீர் என்றென்னப்
புல்லாள் புலத்தக் கனள்.

நினைத்தேன் என்று கூறினேன், நினைப்புக்கு முன் மறுப்பு உண்டா?
ஏன் மறந்தீர், என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.

Amazing, quite a possessive lover..!!
Fine..
இது தான் உண்மைக் காதலா..?
காதலி இப்படித் தான் இருப்பாளா.
இந்த குறள் எல்லாம் ஏன் பள்ளிக்கூடப் பாடத்தில் 
சொல்லித்தரல.

Saturday, January 19, 2008

Noam Chomsky,சர்வதேச ஊடகங்கள் மற்றும் ஈழப்போராட்டம்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி.
ஈழப்போராட்டம் சர்வதேச குற்றமா?
இந்த கேள்விக்கு பதில் சொல்லவேண்டியவன் நானல்லன்; அமெரிக்காவும், பிரிட்டனும்.
பாலஸ்தீனம் அரபுகளின் தேசம். இரண்டாம் உலகப்போரில் யூதர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிக்காக
அரபுகளைக் கொன்று அங்கே யூதர்களைக் குடியமர்த்தினார்கள்.துண்டாக்கப்பட்ட தேசம் ரெண்டாக்கப்பட்டது. பாதி அரபிக்களுக்கு, பாதி யூதர்களுக்கு.

உரிமையே இல்லாத யூதர்க்களுக்கு ஓரு நீதி; உரிமை உள்ள தமிழர்களுக்கு ஓரு நீதியா?

யூதர்களின் கண்ணில் வெண்ணெய்,
தமிழர்களின் கண்ணில் சுண்ணாம்பா?

அமெரிக்காவும் பிரிட்டனும் அரபிக்களையும் அணைத்துக் கொண்டன,யூதர்களையும் இழுத்துக் கொண்டன.
ஏனென்றால் யூதர்களுக்குகப் பெரிய மூளை இருக்கிறது.அரபிகளிடம் பெட் ரோல் இருக்கிறது.
பாவம் தமிழன்! இவனிடம் என்ன இருக்கிறது.

16.01.08 குமுதம் இதழில் வாசகர் ஓருவருக்கு வைரமுத்து அளித்த பதில் இது.

13.01.08 வார ஜுனியர் விகடனில், "சுயநல இலங்கைக்கு தோள் கொடுக்கலாமா?", என்ற தலைப்பில் ரவிகுமார் அவர்களின் கட்டுரையை படி த்தேன். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அராஜகப் போக்கு, மனித உரிமை மீறல்கள்,இலங்கை அரசின் உலகை ஏமாற்றும் த ந்திரம், இந்தியா எடுக்கவேண்டிய நிலை பற்றி ஆழ்ந்து , ஆராய்ந்து எழுத்தப்பட்ட அருமையான கட்டுரை அது. தமிழகத்தில் சில வார இதழ்கள் தவிர , மற்ற தமிழ், ஆங்கில நாழிதல்கள் எந்த அளவிற்கு ஈழப்போரட்டத்தை பற்றி மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கிறது என தெரியவில்லை, ஆனால் மகிந்த ராஜபக்ஷேவின்
அரசு இலங்கை ஊடகங்களை முழு அளவில் பயன்படுத்துகிறது, தன் விருப்புவெறுப்புகளுக்கு
எற்றவாறு, சிங்கள மக்களுக்கு பொய்யான செய்திகளை அளித்து, ஈழப்போராட்டத்தில் தன் கை ஓங்கியிருப்பது போல ஓரு மாய தோற்றத்தை உருவாக்குகிறது.


நாவோம் சாம்ஸ்கி தன்னுடைய ."Manufacturing consent: The political Economy of the Mass Media"
, என்ற புத்தகத்தில் ஊடகங்களை எப்படி அரசு கட்டுப்படுத்த முடியும், கீழ்பணியாத ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களின் ஊடகங்களை எப்படி தனிமை படுத்தி அழிப்பது அல்லது 
அடிப்பணிய வைப்பது பற்றி எழுதியிருக்கிறார்."Manufacturing Consent" என்பதை ஓத்துழைப்பை உற்பத்தி செய்தல் அல்லது இணக்கமாக செயல்பட செய்தல் என தமிழ்படுத்தலாம்.இதற்காக 1975-ல்
கிழக்கு டிமோர்-ரின்
மேல்  இந்தோனேசியாவின் படையெடுப்பை குறிப்பிடுகிறார்.அமெரிக்காவின்
 (வழக்கம் போல) ஆயுத உதவியோடு இந்தோனேசியா கொன்று குவித்த மக்களின் எண்ணிக்கை 2,00,000.

The New York Times மற்றும் மேற்க்கத்திய ஊடகங்கள் இந்த கொடூரங்களை திசை திருப்பி எதுவுமே நடக்காதது போல மக்களுக்கு தவறான செய்திகளை தெரிவித்திருக்கின்றன." The "Staggering mass slaughter" was "a gleam of light in Asia", according to two commentaries in The New York Times, both typical of general western media reaction"- என்கிறார் சாம்ஸ்கி.
இப்போது இராக் போர் மற்றும் உயிர் இழப்புகளை பற்றி அமெரிக்காவில் வெளியாகும் 
செய்திகளும் இதற்கு சரியான எடுத்துக்காட்டு.

இலங்கையில் நடப்பதும் இதுவே.

1.பொய்யான செய்திகளை, கருத்துகளை மக்களின் மனதில் விதைப்பது.
உதாரணத்திற்கு ஐந்து விடுதலைப்புலிகள் போரில் கொல்லப்பட்டால் அதை ஐம்பது
என பொய் சொல்வது.

2.பாதி உண்மையை மட்டும் வெளியிடுதல்.
ஐந்து விடுதலைப்புலிகளும் இருபது இலங்கை ராணுவத்தினரும் கொல்லப்பட்டால்,
விடுதலைப்புலிகளின் இழப்பை மட்டும் பெரிதுபடுத்தி வெளியிடுதல்,இலங்கை ராணுவத்தினரின் 
இழப்பை ஊடகங்களில் வெளியிடாமல் செய்தல்.

3.உண்மையை மறைத்தல்.
தமிழ் இளைஞர்களை கடத்தி கொலை செய்தல் மற்றும் தமிழர்களின் மீதான மனித உரிமை
மீறல்களை வெளி உலகிற்க்கு தெரியாமல் மறைப்பது.

பொய்யை உரக்கச் சொல்லி , மக்களின் மனதில் தவறான செய்திகளை விதைத்து ஆதாயம் தேடும்
கொடூர கெப்பல்ஸ்(Geobbels) பிரச்சாரத்தை தான் செய்கிறது மகிந்த அரசு. நம்மூர் rediff.com மற்றும் ibnlive.com போன்ற செய்திதளங்களும் இலங்கை அரசு வெளியிடும் செய்திகளை வாங்கிக்கொண்டு, ஆராயாமல், உண்மையை அறியாமல் அப்படியே பிரதிபலிக்கும் arm chair journalism தான் செய்கிறது.

பிபிசி ஈழப்போராட்டத்தை பற்றிய செய்திகளை தன் செய்தித்தொடர்பாளார்களை வைத்து சேகரிக்கிறது.
இரு தரப்பு வாதங்களையும் , மறுப்புகளையும் வெளியிடுவதாக தெரிகிறது.
விகடன் தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்ட போது உருக்கமான கட்டுரை எழுதியிரு ந்தது.
அமைதி ஒப்பந்தத்திலிருந்து இலங்கை பின்வாங்கியதை ,"Military solution is all Mr.Rajapakse has left"
,-என்கிறது வால் ஸ்டீரீட் ஜர்னல்.

சர்வதேச சமுதாயம் இலங்கை தமிழர்களுக்கு ஏற்படும் அ நீதியை வேடிக்கை பார்கிறது என்கிறது தமிழ் கார்டியன்
செய்தித்தாள்.

வைரமுத்து அவர்கள் சொன்னது போல,
வரலாறு பெரும்பாலும் பலம் வாய் ந்தவர்களாலேயே எழுதப்படுகிறது.
தமிழீழத்தின் சாத்தியமும், வெற்றியும் விடுதலை புலிகளின் பலத்தை
பொறுத்தே அமையும்.
Related Posts Plugin for WordPress, Blogger...

Email Subscriptions powered by FeedBlitz

Your email address:


Powered by FeedBlitz